பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜூன் 22ம் தேதி அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருப்பதாகவும் இச்சந்திப்பின்போது இரு நாட்டு நல்லுறவு மற்றும் தொழில் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.