பிரபல இயக்குனர்களோடு வைரலாகும் கமலின் புகைப்படும்!

Filed under: அரசியல்,சினிமா |

நடிகர் கமலஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பல துறைகளிலும் செயலாற்றி வருகிறார்.

“விக்ரம்“ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், “இந்தியன் 2,” மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார். இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கமல்ஹாசன் இயக்குனர்கள் சந்தானபாரதி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் சமூகதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.