பிரபல ஓடிடியில் ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம்!

Filed under: சினிமா |

இந்தியாவின் சார்பில் அமெரிக்காவின் ஆஸ்கர் விருது விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட ‘லாஸ்ட் பிலிம் ஷோ’ திரைப்படம் பிரபல ஓடிடியில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு யாரும் எதிர்பாராத விதமாக குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” என்ற திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவுள்ளது. விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் “செல்லோ ஷோ ” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. குஜராத்தி படமான இந்த படம் தென்னிந்தியாவில் பெரியளவில் கவனத்தைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.