பிரபல ஓடிடி தளத்தை வாங்குகிறதா அமேசான்?

Filed under: சினிமா |

அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் என்ற ஓடிடி தளத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஓடிடி தளத்திற்கு மிகப்பெரிய ஆதரவு பொதுமக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. நேரடியாக திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் வாய்ப்பு தற்போது குறைந்துவிட்டாலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி விடுவதால் மாஸ் நடிகர்களின் படங்களை கூட ஒரு மாதம் பொறுத்திருந்து ஓடிடியில் பார்க்கும் நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் எம்எக்ஸ் பிளேயர் தளத்தை வாங்குவதற்கான பணிகள் அனைத்தையும் அமேசான் நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.