பிரபல தயாரிப்பாளரின் தகவல்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் “துணிவு” மற்றும் நடிகர் விஜய்யின் “வாரிசு” ஆகிய திரைப்படங்களுக்காக எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத் இவர்கள் இருவரின் படங்களும் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்திற்கு லலித் சார்பில் இன்னும் தியேட்டர்கள் கைப்பற்றவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, விஜய்யின் வாரிசு படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும், தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறோம். விஜய் படத்திற்காக மட்டும் இந்த தடையில்லை. இது பற்றி சுமூகமாகப் பேசி தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகையில், “விஜய் பெரிய நடிகர், அஜீத் பெரிய நடிகர். எனவே, வாரிசு- 50%, துணிவு- 50% படமும் சம அளவில் தியேட்டர்கள் கிடைக்கும்! தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள். விஜய்யின் படம் இங்கேயும் ரிலீஸ் தெலுங்கிலும் ரிலீஸ் என்பதால், அவர்கள் இதுபற்றி பேசிவருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.