பிரபல நடிகையின் சமூக விழிப்புணர்வு!

Filed under: சினிமா |

3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் பிரபல நடிகையான பூமி பட்னாகர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 50வது ஆண்டு சுற்றுச் சூழல் தினம் ஆகும். பிளாஸ்டிக் மாசுக் கட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் கவனம் செலுத்துவது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக உள்ளது. எனவே பல சமூக ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று, பிரபல நடிகை பூமி பட்னாகர் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “மரங்கள் இல்லை என்றால் இந்த பூமி இல்லை. உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் என்னால் முடிந்தவரை இந்தப் பூமியை தூய்மையாக்குகிறேன். பூமியை பசுமையாக மாற்றுகிறேன். இதை நான் தொடர்ந்து செய்வேன். இப்படிச் செய்வதால் மற்றவர்களும் செய்வார்கள் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.