பிரபல நடிகையின் பல கோடி சொத்துகள் முடக்கம்!

Filed under: சினிமா |

பிரபல நடிகை ஜாக்குலினின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை ஜாக்குலினின் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ரூ.7.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு செய்யப்பட்ட நிலையில் நடிகை ஜாக்குலினுக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.