பிரபல நடிகையுடன் சித்தார்த் காதலா?

Filed under: சினிமா |

நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த்.தொடர்ந்து இவர் “ஆயுத எழுத்து,” “180,” “ஓ மை பிரெண்ட்,” “மிட் நைட் சில்ட்ரன்,” “காவியத் தலைவன்,” “உதயம் என்.ஹெச்.4,” “தீயா வேலை செய்யனும் குமார்,” “ஜிகிர்தண்டா” உள்பட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், தற்போது, பிசினஸ் செய்து வருவதுடன், ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “காற்று வெளியிடை,” “சைக்கோ,” “ஹாய் சினாமிகா,” “செக்கச் சிவந்த வானம்” உட்பட்ட திரைப்படங்களில் நடித்த அதிதி ராவ்வுடன், சித்தார்த் இணைந்து நடித்த “மகா சமுத்திரம்” திரைப்படம் 2021ல் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவரும், சில நாட்களுக்கு முன் “மால டும் டும்” என்ற பாடலுக்கு சேர்ந்து நடனமாடி வீடியோ பதிவிட்டனர். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். இந்த ரீல்சுக்குக்கீழ் “டான்ஸ் மங்கீஸ் தி ரீல் டீல்’’ என்ற கேப்ஷனும் பதிவிட்டதால், இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இதை அதிதி ராவ் மறுத்துள்ளார். மேலும், தன் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்தப்போவதாகவும், மற்றவர்கள் பேசுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு, சித்தார்த் தன் மனைவி மேக்னாவை விவாகரத்து செய்தார்.