‘பிரின்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 25ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம். திரையரங்குகளில் வெற்றி பெறாத பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் ஓடிடியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.