புதுடில்லி பள்ளிகைளை பார்த்து வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Filed under: அரசியல் |

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பயணமாக புதுடில்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். இன்று புதுடில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அவற்றின் நவீன கட்டமைப்புகளை பார்வையிட்டார்.


பின்னர் பேசிய அவர் “டில்லி அரசு பள்ளிகளை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம். எல்லா துறைகளையும் போல் தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நாளை நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் புதுடில்லி முதல்வர் பங்கேற்பார் என்று உறுதியாக நம்புகிறேன், அவருக்கு மாநில மக்கள் சார்பில் அழைப்பு விடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.