புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கியதில் மரணம்!

Filed under: தமிழகம் |

திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் பகுதியில் விமல் ராஜ்க்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டரான இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கி உள்ளார். அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டதாகவும் இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த 25 வயதான விமல் ராஜுக்கு திருமணமாகி 8 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.