புலம்பல் புலிகேசி !!!

Filed under: அரசியல்,இந்தியா |

158d40f7-529b-48e2-b977-7f02377f3c0eHiResமழையில் நனைந்தபடி நடுநடுங்கி வந்த புலிகேசிக்கு டவல் கொடுத்து துவட்ட வைத்துவிட்டு, சூடான இஞ்சிடீயை கொடுத்து நார்மல் ஆக்கினோம்.

உண்ணாவிரத„ சோர்வு இன்னும் நீங்கவில்லையா? என்று பேச்சுக்கொடுத்தோம். மன்’மதன்’ ஆனவர் நல்ல பிள்ளையாகி, கட்டைவிரலைக் குருவுக்குக் காணிக்கையாக்கியவரின் பெயரிலான ஏட்டாளரிடம் சரண்டராகிவிட்டாராம். சமாதானமாகி விட்டதால் போராட்டம் போஸ்டரோடு நின்றுபோனதாம். உண்ணாவிரதமிருக்கவேண்டிய தேவையே இல்லாமல் போனது என்று பதிலளித்தார் புலிகேசி.

பாரிவேந்தரை சாரிவேந்தராக்கிய பத்திரிகை சுதந்திரப்பாதுகாப்பு மய்யத்துக்குப் பாராட்டு என்று வாழ்த்தினோம்.

சுதந்திரதினத்துக்கு முதல் நாளில் சென்னை ஹைகோர்ட் நீதியரசர் சுதந்திரம் ஓய்வுபெற்று, இதே மாதத்தில் மேலும் ஒருவர் ஓய்வுபெறவுமிருப்பதால் 20க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஏற்பட்டுவிட்டதாம். ஒரு பெண் நீதிபதி உ„சநீதிமன்றம் செல்லவுள்ளாராம். இக்காலியிடங்கள் நிரப்பப்படும்போது, பத்தாண்டுகளாக„ செயல்பட்டுவரும் மதுரை பெஞ்சில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், பிளீடர்கள், பிராசிக்யூட்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது என்று தகவல் தந்தார் புலிகேசி.
நியாயமான கோரிக்கைதானே? தமிழரான புதிய இந்தியத்தலைமை நீதிபதியும், தமிழக முதல்வரும் சந்திக்கும்போது சிந்திக்க வேண்டிய விஷயம் இது என்று ஜால்ராத் தட்டினோம்.

ஆந்திராவில் லோக்சபா தேர்தல் பிர„சாரத்தை துவக்கிய மோடி, தமிழக முதல்வரைப் பாராட்டி, தமிழ்நாட்டைப் பார்த்து நடந்துகொள்கவென்று காங்கிரஸ் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாரே என்று நம்மிடம் போட்டுவாங்கும் முயற்சியைத் தொடங்கினார்.

பி.ஜே.பி. முதல்வர்களையும் தமிழக முதல்வரையும் மோடி சமமாகக் கருதுவது தெரிகிறது. அ.தி.மு.க. எதிரியல்ல என்று சொல்லி„ சென்றுவிட்டார் மோடி. காங்கிரஸ்தான் பொது எதிரி என்பதை உணர்த்திவிட்டார். ஆனால் அ.தி.மு.க.விடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனுமில்லையே… மேலும் தலித் கிறிஸ்தவர்களை ஷெட்யூல்டு வகுப்பினர் பட்டியலில் சேர்க்கக்கோரி முதல்வர், பிரதமருக்கும் பரிந்துரைத்துள்ளதை பி.ஜே.பி. ரசிக்கவில்லை. இல.கணேசன் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்து விட்டார். அ.தி.மு.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவந்து விடும் மோடியின் முயற்சி வெற்றிபெறுமா? என்று சந்தேகம் வருகிறது என்று தெரிவித்தோம்.

உ„சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும், இந்தியாவின் ஒரு அறிவுசார்ந்த மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றியவரும், பலர் நீதியரசர்களாக வழிவகுத்துக் கொடுத்தவருமான ஒருவர் தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும், இந்தியத் தலைமை நீதிபதி சதாசிவமும் தினமும் ஒருமுறையாவது படித்துப்பார்த்து விடுகிறார்களாம். மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் கூட்டணிக்கும் 272 எம்.பி.க்கள் இல்லாது போனால் யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்? என்று அக்கட்டுரை தெளிவாக சூத்திரம் தருகிறதாம். தேர்தலுக்கு முன்பே கூட்டணி சேரும் கட்சிகளுக்கும், தொங்கு நிலை ஏற்பட்டபின் அணிசேரும் கட்சிகளுக்கும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளதாம். மக்கள் தீர்ப்பு என்பது தேர்தலுக்கு முன்பே கூட்டணி காணும் கட்சிகளுக்குத் தான் பொருந்தும் என்றும் அக்கட்சி பிரதிநிதிகள் மட்டுமே அமை„சரவையில் இடம் பெறத் தகுதிபடைத்தவராவர் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளதாம். பேரம்பேசி அமைச்சரவையில் இடம் பிடிப்போர் பற்றி ஜனாதிபதி கேள்வி எழுப்பலாமாம் என்று ஒரு ஆய்வு அறிக்கை படித்தார் புலிகேசி.முடிவாக என்ன சொல்ல வருகிறீர்? என்று மடக்கினோம்.

தேர்தல் முடிந்த பிறகு நிலைமைகளுக்கேற்ப நிலைப்பாடு எடுக்கலாம் என்று கருதும் முலாயம், நிதிஷ், மம்தா, நவீன் பட்நாயக், தேவகவுடா, மாயாவதி போன்றோர் பழைய நினைப்பில் இருக்க முடியாது. ஏதாவதொரு அணியில் இருந்தாக வேண்டும். முலாயமும், மாயாவதியும் ஒரு அணியிலிருக்கமாட்டார்கள். மம்தாவும், இடது சாரிகளும் ஒரு அணியிலிருக்க முடியாது. பீகாரில் நிதிசும், லாலுவும் போன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் என்று விளக்கினார் புலிகேசி.
தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கமாகிவிடுவதுதான் அ.தி.மு.க.வுக்கு நல்லது என்று நலம் விரும்பிகள் கருதுவதை பதிவு செய்தோம்.

‘தலைவா’ பட ரிலீஸ் பற்றிய சேதி ஏதும் உண்டா? என்று கேட்டார் புலிகேசி.

உண்ணாவிரத நாடகமாடும் அப்படக்கதாநாயகன் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றித்தான் பலருக்கும் தெரியும். அப்பட இயக்குநர் விஜய், அவரது தந்தை அழகப்பன் பற்றித் தெரியாது. இந்தச் செட்டியார் அழகப்பன் தான், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு முதல்வராக இருந்தபோது வைரமுத்துபோல் ஒரு பலான பணிகளுக்கான நண்பராம். இந்த நபரின் மூத்த மகன் உதய் என்ற பெயரில் நடிகராக்கப்பட்டு, கருணாநிதியால் ஆசீர்வதிக்கப்பட்டவர். சினிமாத்தயாரிப்பாளரான அழகப்பனின் நட்பு கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி இரண்டுக்குமே பிடிக்காதுபோனதாம். முதியவரின் உடல் நலம் கெடத்தக்க காரியங்களை அழகப்பன் செய்ததாகக் கோபமாம்.

அதுபோக சி.பி.ஐ. விசாரணை, இன்கம்டாக்ஸ் ரெய்டு, பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் என்று குற்றப் பின்னணியுள்ள பாரிவேந்தர் என்றும் பச்சைமுத்து என்றும் கல்வியாளராகவும், அரசியல் தலைவருமாக உலாவரும் நபர் படத்துடன் வேந்தர் மூவிஸ் வழங்கும் என்ற விளம்பரமும் ‘தலைவா’ பட விவகாரத்தில் அடிபடுகிறது என்று உள்ளதை உள்ளபடி உரைத்தோம்.

மாநில அரசுக்கு அதிகாரிகளையும், ஊழியர்களையும் தேர்வு செய்து தரும் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உறுப்பினர்களை நியமிக்க தி.மு.க. ஆட்சியின் முதல் குடும்ப உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் வசூல்வேட்டை நடத்தினர். அப்படிப் பதவிக்கு வந்தவர்கள் போட்ட பணத்தை எடுக்க முயல்வது இயல்புதானே. லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடியது. ஆட்சிமாறியதும் சர்வீஸ் கமிஷன் முதன் முறையாக அம்மாவால் விஜிலென்ஸின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. மெம்பர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடந்தன. அரசாணையை„ செல்லாதென அறிவிக்கக்கோரி, அன்றைய சேர்மன் நீதிமன்றம் சென்றார் என்று சம்மந்தமில்லாமல் ஒரு சரித்திரம் படித்தார் புலிகேசி.

என்ன சொல்ல விரும்புகிறீர்? என்று இடைமறித்தோம்.

அ.தி.மு.க. அரசின் அரசாணை செல்லத்தக்கதும், அவசியமானதென்றும் அன்று ஹைகோர்ட்டில் வாதிட்ட அன்றைய அட்வகேட் ஜெனரல்தான் இப்போது அதே சர்வீஸ் கமிஷனின் தலைவர். இப்போதும் உறுப்பினர் பதவிகள் சில காலியாக உள்ளனவாம். காலியாகும் நிலையிலும் உள்ளனவாம். அவற்றை நிரப்ப வேண்டிய சூழலில் தி.மு.க.காலத்து வசூல்வேட்டைக்கு முயற்சி நடக்கிறதாம். அம்மா ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இ„செயல் தடுக்கப்பட்டாக வேண்டும் என்றார் புலிகேசி.

மெம்பர் பதவியை சேர்மன் நிரப்பும் நடைமுறை அங்கு கிடையாது என்பதை முத்துக்குளிக்க நினைக்கும் ராசாக்கள் புரிந்துகொள்ளட்டும். அவரிடம் பார்ட்டி பண்டு என்று கொடுத்து யாரும் ஏமாந்துவிடக்கூடாது. அரசின் தேர்வு ஆளுநரின் ஆணையாக வரும் என்பதுதான் சட்ட, நிர்வாக நிலை என்று பதிவு செய்தோம்.

கனிமவளக் கொள்ளையில் பி.ஆர்.பி.க்கு ஒரு நீதி. வி.வி.க்கு ஓர் நீதியா? என்ற முணுமுணுப்பு தென்மாவட்டங்களில் உள்ளதை திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மூலம் அறிந்த விஜயகாந்த் அதையே தென்மாவட்டத் தேர்தல் பிர„சாரத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது பற்றிக் கேள்விப்பட்டீரா? என்று கோர்த்தார் புலிகேசி.

தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆசீஷ்குமார் வேறு பல குற்ற„சாட்டுகள் அடிப்படையில் மாற்றப்படப்போகிறோம் என்பதை அறிந்து தானும் சகாயம், அன்சுல் மிஸ்ரா போல் சித்தரிக்கப்பட விரும்பி வி.வி.மினரல் மேட்டரைக் கையிலெடுத்தாராம். வைகுண்டராஜன் கூட்டணியில் தனது மாறுதலுக்கு வி.வி.யே காரணமென்று செய்தி வெளிவரவும் வைத்தாராம். கொடநாடு சென்றும் விஜய் பார்க்க முடியாத முதல்வரைத் தான் பார்த்துவிட்டதாகத் தனது பி.ஆர்.ஓ.க்கள் மூலம் கிளம்பிவிட்டாராம். சாதிப்பாகுபாடு பார்ப்பதில்லை என்பதில் உறுதியாகவுள்ள முதல்வர் தேவர் & மீனவர் உணர்வுகளை மதித்து வைகுண்டராஜனுக்குக் காப்பு மாட்டுவது உறுதி என்றுதான் கேள்விப்பட்டோம் என்றோம்.

ஆண்டியப்பனை அகற்றிய கையோடு ரா & ரா, ரா & ரா, உறவுகளையும் முறிப்பார் முதல்வர் என்கிறது கோட்டை மற்றும் தோட்ட வட்டாரங்கள் என்று காதுக்குள் ஓதிவிட்டுக் கம்பி நீட்டிவிட்டார் புலிகேசி. கிரானைட், தாதுமணல், கல்விக் கொள்ளையர்கள் சாதிக்குள் ஒளிந்து கொண்டு, வி.வி. முகமுடியைக்கிழிக்கும் விவாதம் நடத்தும் புதிய தலைமுறை டி.வி.சேனலை முடக்கக்கோரியும், அதன் உரிமையாளர் கைது கோரியும் நாடார் மகா ஜனசங்கம் சுவரொட்டி போட்டுள்ளதால் நாடார் & பார்க்கவகுல சாதி மோதல் வாய்ப்புள்ளது என்பதை அறிவிக்கிறோம் என்று முடித்துக்கொண்டோம். மூவருக்குமே என்.எஸ்.ஏ.தானோ?