பெங்களூரில் நடந்த பார்ட்டி; கலந்து கொண்ட இளம்பெண்கள்!

Filed under: இந்தியா |

போதை மாத்திரைகள், கொகைன் ஆகியவை பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த பார்ட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் 30 இளம் பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பண்ணை இல்லத்தில் வாசு என்பவர் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் அதில் 30 பேர் இளம்பெண்கள் என்றும் கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பார்ட்டி விடிய விடிய நடந்ததாகவும் டான்ஸ், பாடல்கள் ஆட்டம் பாட்டம் ஆகியவை நடந்த இந்த பார்ட்டிக்காக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வார்த்தையில் போதை மருந்து மற்றும் கொகைன் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெங்களூர் சிட்டி காவல் நிலைய போலீசார் அதிரடியாக சோதனை செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளார். போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.