கார்கில் போரின் 21வது வருடம் வெற்றி தினம்: நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை!

Filed under: இந்தியா |

இன்று கார்கில் போர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றுடன் கார்கில் போரில் வெற்றி பெற்று 21வது வருடம் ஆகிறது.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவருடன் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் முப்படை தளபதிகளுடன் டெல்லியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.