பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

Filed under: தமிழகம் |

பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளராக சங்கீதா பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் திடீரென அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவின் தற்கொலைக்கு வழக்கறிஞர்கள் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று வருகை பதிவேட்டில் எழுதி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் திடீரென தற்கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.