பெண் தீ வைத்து எரித்துக் கொலை!

Filed under: இந்தியா |

பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவரை மத்திய பிரதேச மாநிலத்தில் தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த நிலத்தை 3 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.
அப்பெண் வலியால் துடித்தபோது, அவர்கள் மூவரும் அதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.