பேட்ட பட வில்லனுக்கு, மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீசு!

Filed under: சினிமா |

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் “சிங்காரம்” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார்.

கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அடித்து தூள் கிளப்பிவிட்டார். 46 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவியும், மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில், இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

ஆனால், இருவரும் முறையாக விவகாரத்து பெறவில்லை, இந்நிலையில் மனைவி ஆலியா சித்திக், நவாசுதினுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாலிவுட் சினிமாவின் தற்போதைய ஹாட் செய்தியாக பேசப்பட்டு வருகிறது.