பேருந்தில் சிக்கி மாணவர் பலி!

Filed under: தமிழகம் |

பள்ளி மாணவர் விழுப்புரத்தில், தனியார் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அனீஸ் என்ற மாணவர் விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையமருகே வந்த பேருந்தில் பயணித்துள்ளார். மாணவர் அனீஸுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனனர். அப்போது, அனீஸ் இறங்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த வேகத்தில் பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்தனர். இதன் அடிப்படையில், மாணவர் அனீஸ் பேருந்தின் படியில் நின்று பயணித்துள்ளார். கீழிறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, மாணவரின் உறவினர்கள், பேருந்து மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.