பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி

Filed under: உலகம் |

பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி

இந்திய விஞ்ஞானி டாக்டர்.ராஜா விஜ்ய குமார் உருவாக்கியுள்ள வைரஸ் தீவிரத்தை குறைக்கும் சாதனம், உள்வெளியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், அரங்குகள் போன்றவை பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள இந்த சாதனம் வழி செய்கிறது.

‘Shycocan’ கார்ப்பரேஷன், ‘ஷைகோகான்’ எனும் பெயரில் இந்த உருளை வடிவிலான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், கொரோனா வகையைச்சேர்ந்த வைரஸ்கள் பரவுவதில் இருந்து உள்புற பகுதியை பாதுகாப்பாக மாற்றுவதாக ஷைகோகான் கார்ப்பரேஷன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும், மற்ற ப்ளு காய்ச்சல் வகை வைரஸ்களையும் இது கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *