புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகை பிடிப்பதற்கும் கொரோனா வைரஸ்க்கும் ஆன தொடர்பை பற்றி 34 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் புகைப்பிடிப்பவர்களின் கொரோனா இறப்பு விகிதம் பற்றிய புள்ளி விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களில் 18% பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுதல் குறைவு என சென்ற ஏப்ரல் மாதம் பிரெஞ்சு ஆய்வில் கூறப்பட்டது. ஆனால், இதனை பல விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.