பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமென மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக புதுவை மற்றும் தமிழ்நாடு முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர், “பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களான கடற்கரை, சந்தை, திரையரங்குகள் ஆகியவற்றுக்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணிவதை கடைபிடிக்காத பட்சத்தில் அபராதம் விதிப்பதை குறித்து முடிவு எடுக்கப்படும். புதுவையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 15 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அரசு ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.