பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

Filed under: தமிழகம் |

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது வெளியான தகவலின் படி சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக வருகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடித்து அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.