‘பொன்னியின் செல்வன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “அகம் நக” என்ற பாடல் வெளியாகுமென ஏற்கனவே பட குழுவினர் அறிவித்திருந்தனர். சற்றுமுன் இந்த பாடல் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். மிகச்சிறந்த மெலடி பாடல்களில் ஒன்றாக இப்பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் இந்த பாடலுக்கு கமெண்ட் எழுதி வருகின்றனர்.