தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Filed under: சினிமா |

அடல்ட் காமெடி படம் என்கிற பெயரில் ஆபாச காட்சியை வைத்து திரைப்படம் இயக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்; ஆபாச படங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சென்சார் போர்டும் இணைந்து தலையிட வேண்டும் என பாரதிராஜாவின் கோரிக்கையை பற்றி பதில் அளித்த அமைச்சர்; மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் சென்சார் போர்டு இருக்கிறது. ஆனாலும், ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசு மற்றும் சென்சார் போர்டுக்கும் தமிழக அரசை வலியுறுத்தும்.

மேலும், தமிழக கலாச்சாரத்தை கெடுக்கும் காட்சிகள் எந்த படத்தில் இருந்தாலும் சென்சார் போர்டு மூலம் தடை விதிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார்.