“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வசூல்!

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது.

நீண்ட கால முயற்சிக்கு பின் கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்போது திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 12 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது வரை “பொன்னியின் செல்வன்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 206 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இன்னும் பல திரையரங்குகளில் கணிசமான கூட்டத்தோடு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு “சர்தார்,” “பிரின்ஸ்” என இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் தீபாவளிக்கு பிறகு மல்டிப்ளக்ஸ்களில் இந்த படம் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது வரை இந்த படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.