பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஆடியோ லான்ச் எப்போது?

Filed under: சினிமா |

சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்போது திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மார்ச் 29ம் தேதி இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.