பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

Filed under: சினிமா |

ஏப்ரல் 28ம் தேதி “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார்.