பொன்முடி தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

பொன்முடி வழக்கறிஞர் “அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் நீதிபதி ஜெயச்சந்திரன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் “நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை Latent Bias என சட்ட முறையில் கூறுவார்கள். இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். “நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்” என்று கூறினார்.