போக்குவரத்துத் துறையின் அதிரடி அறிவிப்பு

Filed under: தமிழகம் |

கோவை மாநில போக்குவரத்து காவல்துறை வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னர் அமர்ந்து செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கடந்த மே மாதத்தில் சாலை விபத்துகளால் 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்து இருப்பதால் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது.