போக்குவரத்து ஆணையரின் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்ற செய்தி பொய்யானது என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை வாங்கி தமிழ்நாடு போக்குவரத்து ஆணையத்தில் ஓட்டுநர்கள் சமர்ப்பித்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது பொய்ச்செய்தி என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தவறான தகவலை பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.