போக்குவரத்து பாதுகாப்பு துறை ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. நேற்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 2,200 வழக்குகளும், பைக் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பாக 1,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3926 பேர் மீதும். பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக 300க்கும் மேற்பட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.100 அபராதம் வசூலித்தனர்.