போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!

Filed under: அரசியல்,தமிழகம் |

இந்தியத் தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன். தேர்தலுக்காக வருபவர்கள் நாங்கள் அல்ல. இந்த உச்சி வெயிலில் உற்சாகம் அளித்த தொண்டர்களை பார்க்கும்போதே நாம் வெற்றி பெறுவோம் என்று தெரிகிறது. ஏப்ரல் 19ம் தேதி நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்று பேசினார். மேலும், கடந்த முறை ஒன்றாக வந்த எதிரிகள் இம்முறை தனிதனியாக பிரிந்து வருகின்றனர். கடந்த முறை 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். தற்போது 6 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.