போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

Filed under: தமிழகம் |

போலியாக சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 7 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 நபர்கள் திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர். இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை அனைத்தும் போலியென தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வந்துள்ளது.