தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டலின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

Filed under: தமிழகம் |

திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி ஆன ஞான திரவியம் மற்றும் அவருடைய மகன்கள் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கனபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இன்று காலை அவருடைய கணவர் மற்றும் மகளுடன் சென்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.ஐ சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் எம்.பி., ஞான திரவியம் எனக்கு உரிமையான ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். மேலும் எம்பியும் அவருடைய ஆட்களும் சேர்ந்து என்னுடைய குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபுகார் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் காவல்துறையினர் ஞான திரவியம் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் உள்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.