போலி மருத்துவர் கைது!

Filed under: தமிழகம் |

10 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கண்ணன் 10வது வகுப்பு மட்டுமே படித்த முடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். போலி மருத்துவம் பார்ப்பதற்கு மக்களிடம் பணமும் வசூலித்து வந்துள்ளதாகக் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, அவரிடம் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, போலீசார் போலி மருத்துவர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.