குடியாத்தத்தில் போலி மருத்துவர் கைது !

Filed under: தமிழகம் |

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அக்ரஹாரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் யோகானந்தம் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இரவு 7.30 மணி அளவில் மேற்படி முகவரிக்கு சென்று சோதனை செய்ததில் Dr.விஜயகோவிந்தராஜன், MBBS.,DLO என்பவரின் பெயரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் இயங்கி வருகிறது.

போலி மருத்துவர் யோகானந்தம்

மேற்படி கிளினிக்கில் யோகானந்தம் என்பவர் வயதான பாட்டி ஒருவருக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மேற்படி கிளினிக்கில் இவர் தொடர்ச்சியாக பலருக்கு மருத்துவம் பார்த்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குடியாத்தம் தாசில்தார் வத்சலா உள்ளிட்ட வருவாய்துறையினர், இணை இயக்குனர் (மருத்துவம்) அவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததின் பேரில் மருத்துவர் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தார். இக்குழு மேற்படி இடத்தை சோதனை செய்து புகார் அளித்ததின் பேரில் மேற்படி நபரை குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்