போலீசில் புகாரளித்த மகேஷ்பாபு மனைவி!

Filed under: சினிமா |

போலி சமூக வலைதள கணக்குகள் தனது மகள் பெயரில் பதிவு செய்து பண மோசடி செய்து வருவதாக மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகள் உண்டு. இவர் மகேஷ் பாபு நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சிலர் சித்தாரா பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதிலிருந்து சிலருக்கு லிங்குகள் அனுப்பி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனே மகேஷ் பாபு மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா அளித்துள்ள புகாரில், “எனது மகள் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு ஆரம்பித்து மோசடி செய்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். போலியான லிங்குகள் கிளிக் செய்து பணத்தை அனுப்ப வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.