கமல் படத்தில் நடந்த மாற்றம்!

Filed under: சினிமா |

“விக்ரம்” திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த திரைப்படம். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது ஒன்றுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை விரைவில் முடிக்கவுள்ள கமல் அடுத்து “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த வாரம் கமல் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. முதலில் இத்திரைப்படத்துக்காக ஹெச் வினோத் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதையை சொல்லி கமல்ஹாசனிடம் சம்மதம் வாங்கியதாக சொல்லப்பட்டது. முதலில் அந்த கதைக்கு ஓகே சொன்ன கமல், இப்போது அக்கதையில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய தலைவன் இருக்கிறான் கதையை சொல்லி, அந்த கதையை படமாக்கலாம் என கூறியதாகவும், இப்போது அதற்கான வேலைகளில் ஹெச் வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.