ப்ளாப் ஆனதா “லால் சிங் சத்தா?”

Filed under: சினிமா |

இந்தி நடிகர் அமிர் கான் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “பாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இப்படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். இன்று திரைப்படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என பல இடங்களில் படத்தை கண்டுகளித்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த அளவு ஆமீர் கான் அந்த கதாப்பாத்திரத்தை புரிந்து நடிக்கவில்லை. பல இடங்களில் பிகே படத்தில் வரும் ஏலியன் ஆமிர்கான் போல முகபாவனைகள் காட்டுகிறார் என்று சிலர் விமர்சித்துள்ளனர். படத்திற்கு IMDB தளத்தில் 3.9/10 ரேட்டிங்கே கிடைத்துள்ளது. மேலும் பல இடங்களில் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை என்றும், சமீபமாக ஆமீர்கானுக்கு எதிராக #BoycottLalSinghChaddha என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருவதும் பட சரியாக போகாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.