மகளிருக்கான தகவலை சொன்ன அமைச்சர் உதயநிதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

மாதம் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தேர்தல் முடிவடைந்து ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் என்றும் குடும்ப தலைமை தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இன்னும் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார் என்றும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.