மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

Filed under: தமிழகம் |

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா தொற்று நோயால் பெரும் அவதிக்கு ஆளானோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரொனா தொற்று கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்நோயின் பரவல் அதிகமாவதால் அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார். கொரொனா நோய் தொற்றைக் குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.