மஞ்சு வாரியர் நடிக்கும் தமிழ் படம் என்ன?

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான “எஃப் ஐ ஆர்” திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்போது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அஜீத்துடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்த “துணிவு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அவரின் கதாபாத்திரமும் பாராட்டுகளைக் குவித்தது.