மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்!

Filed under: இந்தியா |

தற்போது இந்தியாவில் பெரிதாக பேசப்படும் மணிப்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மே மாதம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர் கூட தப்ப மாட்டார்கள் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மணிப்பூர் பெண்கள் கொடூர நிகழ்வுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஹேராதாஸ் என்பவர் அதான் முக்கிய குற்றவாளி என்றும் மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.