மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

“பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்.
பின்னர், “இதய கோவில்,” “பகல் நிலவு,” “மௌனராகம்,” “நாயகன்” “தளபதி,” “ரோஜா,” “காற்றுவெளியிடை,” “செக்கச்சிவந்த வானம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில், இவர் இயக்கத்தில், “பொன்னியின் செல்வன்-1, 2” ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவர். அவ்வகையில், ஒவ்வொரு படத்திலும் தன் திறமையைக் காட்டி, இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உருவாக்குவதில் மணிரத்னம் புகழ்பெற்றவர். இன்று அவரது 66வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.