மதபோதகரை நம்பி 400 பேர் பலி!

Filed under: உலகம் |

கென்யா நாட்டில் மத போதகர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம் என்று கூறியதையடுத்து உண்ணாவிரதம் இருந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கென்யா நாட்டிலுள்ள மாலண்டி கடற்கரை நகரத்தில் தேவாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள மத போதகர் பால் மெக்கன்சி என்பவர் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தால் இயேசுவை சந்திக்கலாம் என்று கூறியதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்க்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதபோதகரை நம்பி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போதகர் மெக்கன்ஸி அவரது மனைவி உள்பட 16 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண டிரைவராக இருந்த மெக்கன்ஸி மத போதகராக மாறி 400க்கும் மேற்பட்டவர்கள் மரணத்திற்கு காரணமாக இருப்பது கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது