மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ஏசி பேருந்துகள்!

Filed under: தமிழகம் |

கொடைக்கானலுக்கு அதிகமாக வரும் சுற்றுலா பயணிகளுக்காக மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏசி பேருந்துகள் மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும். இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:45 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு ஆரப்பாளையம் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து இடைநில்லா பேருந்து என்பதால் மதுரையிலிருந்து நேரடியாக கொடைக்கானல் செல்லும் என்றும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.