மதுரையில் மருந்துக்கடைக்கு சீல்!

Filed under: தமிழகம் |

மதுரையில் மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் காமராஜர் சாலையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மருத்துவர் பரிந்துரை சீட்டில்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனருக்கு போலீசார் கடிதம் எழுதியதை அடுத்து அந்த மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.