மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளார். இவரது பேச்சால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இடைத்தேர்தல் நடந்தது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் தொகுதி பிரச்சனையை குறித்து பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உண்மையில் ராஜினாமா செய்வாரா? மதுரை தெற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.