மதுரை ஐகோர்ட் கண்டிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஐகோர்ட் கிளை, “சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது, முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது. அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது. மதுரை மாநகராட்சியில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் கட்ட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்” மதுரை விளாங்குடியில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றக்கோரி மதன் குமார் தொடுத்த வழக்கில் தான் நீதிபதிகள் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தனர்.