மத்திய அரசு கடிதம்!

Filed under: தமிழகம் |

மத்திய அரசு 9 மாநிலங்களுக்கும் கொரோனா பற்றிய தகவலை குறித்து கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக உயர்ந்தது. புதிதாக 2,603 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,517 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,091 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 200.61 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு, கேரளா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.